யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய், கட்டுடை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ( மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் சங்கானை பகுதியை சேர்ந்த முகுந்தன் அஜந்தா எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயையும் மகளையும் வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் தாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

விபத்தினை அடுத்து வாகனத்தின் சாரதியும் மற்றுமொரு நபரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் வாகனத்தில் இருந்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாகனத்தில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் , சாரதியை விரைந்து பொலிஸார் கைது செய்ய வேண்டும் என வீதியில் கூடிய மக்கள் பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் , அவ்விடத்தில் சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து , விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்தினையும் பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் . கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை தப்பியோடிய வாகன சாரதியையும் மற்றைய நபரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version