ஹைதராபாத்: திருடச் சென்ற வீட்டில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்த திருடன், அங்கு இருந்த ‘சிசிடிவி’ கேமராவை பார்த்து திட்டிவிட்டு, 20 ரூபாயை வீசிச் சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறி உள்ளது.

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மகேஸ்வரம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் திருடுவதற்காக, திருடன் ஒருவன் சென்றான்.

வீட்டில் நகை, பணம் இருக்கிறதா என அனைத்து அறைகளையும் அலசி ஆராய்ந்த திருடன், எதுவும் சிக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்தான்.வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து, ‘1 ரூபாய் கூட இல்லாத இந்த வீட்டிற்கு சிசிடிவி கேமரா எதற்கு’ என, சைகையில் தன் அதிருப்தியை

வெளிப்படுத்தினான்.
பின் பிரிஜ்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சென்ற திருடன், மீண்டும் திரும்பி வந்து தன் பர்சில் இருந்து, 20 ரூபாயை எடுத்து தண்ணீருக்காக என்று கூறி, மேஜை மீது வீசி விட்டுச் சென்றார்.
மறுநாள் காலை வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை சோதித்த போது, திருடனின் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

இது குறித்து அவர்,போலீசில் புகார் அளித்ததுடன், சிசிடிவி காட்சிகளை சமூகவலைதளத்திலும் வெளியிட்டு உள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version