சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, காணொளிகளை பதிவிட்டு, குரல்களை பதிவிட்டு அதிக லைக்குகளை (விருப்பங்களை) அள்ளி குவிப்பதற்கே பலரும் முயற்சிக்கின்றனர். சிலருக்கு லைக்குகள் அள்ளிக்கொண்டு கிடைக்கின்றன. இன்னும் சிலருக்கு அதுவே ஆபத்தில் போய் முடிகின்றது.

அ​திக, ‘லைக்’குகளை பெறுவதற்காக இளைஞன் ஒருவன், ரயிலில் சாகசம் செய்தபோது ஏற்பட்ட விபரீதத்தால், அவருடைய கை ஒன்றும், கா​ல் ஒன்றும் துண்டான சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வடாலாவிலுள்ள அன்டாப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஹத் ஷேக். இவர் ஓடும் ரயில்களில் கம்பியைப் பிடித்தபடி பிளாட்பார்மில் கால்கள் தேய்த்தபடி சறுக்கிச் சென்று சாகசத்தில் ஈடுபடுவார்.

இதை வீடியோவாக எடுத்து, லைக்குகள் பெறுவதற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவார். இந்நிலையில், இவர் மீது, ரயில்வே பாதுகாப்பு பொலிஸார் (ஆர்பிஎப்) வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கண்டுபிடித்து அவரது இருப்பிடத்துக்குச் சென்றபோது விபத்தில் அவர் ஒரு கை, காலை இழந்தது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

மஸ்ஜித் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம், சாகசம் செய்தபோது அவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தது அப்போதுதான் ஆர்பிஎப் பொலிஸாருக்குத் தெரியவந்தது.

அவரை ரயில்வே ஊழியர்கள்மீட்டு செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது பலமாக அடிபட்டிருந்ததால் அவரது ஒரு கால், கையை மருத்துவர்கள் வெட்டி எடுக்க வேண்டியிருந்தது என்று தெரியவந்துள்ளது.

“இதுபோன்று அபாயகரமான வகையில் ரயில்களில் சாகசம் செய்யும் இளைஞர்களுக்கு ரயில்வே நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுக்கிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில் திணைக்களம் எச்சரித்துள்ளது,

Share.
Leave A Reply

Exit mobile version