பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் முன் பாய்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயிலின் இயந்திரத்தின் முன் ஒருவர் பாய்ந்ததாக ரயில் சாரதி ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் உயிரிழந்தவரின் சடலம் ஹட்டன் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி ஹட்டன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version