உத்தரப்பிரதேசம் அலிகார் மாவட்டத்தில் உள்ள தானிப்பூர் என்ற கிராமத்தில் இருக்கும் ஆரம்ப பள்ளி ஒன்றில் டிம்பிள் பன்சான் என்ற ஆசிரியை தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சில மாணவிகள் விசிறி வீசியுள்ளனர்..
உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் மாவட்டம் தானிப்பூர் கிராமத்தில் உள்ளது தானிபூர் என்ற கிராமம்.
இங்கு அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியைரொருவர், பாடம் நடத்தாமல் பாய் போட்டு வகுப்பறையிலேயே தூங்கியிருக்கிறார்.
அவருக்கு மாணவர்கள் விசிறி வீசும் காட்சி பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வீடியோவின்படி மூன்று குழந்தைகள் அந்த ஆசிரியைக்கு விசிறி வீசியுள்ளனர். 2 நிமிடங்கள் வரை இருக்கும் அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த ஆசிரியை தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த காணொளி அங்குள்ள கிராம மக்களால் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
நெட்டிசன்கள் பலரும், ‘மாணவர்கள் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், மதிப்பையும் பெறுவதற்கு ஆசிரியர்களே எப்போதும் முக்கிய காரணமாக இருக்கின்றனர்.
மாணவர்களின் சிறந்த எதிர்காலம் ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால் அப்படியான ஆசிரியர்களே மாணவர்கள் மேல் அக்கறையில்லாமல், ஏனோ தானோ என்று இருந்தால்… மாணவர்கள் எதை கற்றுக் கொள்வார்கள்….?’ என்று கூறி அந்த ஆசிரியையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
जब शिक्षक ही ऐसे होंगे तो शिक्षण कैसा होगा,भयंकर गर्मी से निजात पाने को मासूमों से हवा कराती मास्टरनी साहिबा, 😤👩🏫
अलीगढ़ में शिक्षिका के द्वारा मासूम बच्चों से उमस भरी गर्मी में पंखा कराने का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है. यूपी के अलीगढ़ के धनीपुर ब्लॉक के… pic.twitter.com/AHud4DaLnE
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) July 27, 2024