புத்தளம் வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு முன்னால் உள்ள கலா ஓயா ஆற்றிற்கு குழிக்கச் சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (28) மாலை சடலாக மீட்கப்பட்டவர் உட்பட நால்வர் குளிப்பதற்கு கலா ஓயா ஆற்றிற்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்கள்.
இதன்போது அங்கு இவர்களுக்கும் மற்றுமொரு குழுவினருடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்டவர் தவிர்ந்த ஏனைய குழுவினர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தப்பிச் சென்ற குழுவினர் சடலமாக மீட்கப்பட்டவரைத் தேடி மீண்டும் கலா ஓயா ஆற்றிற்கு வருகைத் தந்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அங்கு காணப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர் வந்தனாகம, கலங்குட்டிய, கல்நேவ பகுதியைச் சேர்ந்த 47 வயததுடைய திருமணமாகாதவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.