ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தின்படி யாரை வேட்பாளராக தெரிவு செய்வது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக அவர்கள் தொடர்பான பெயர்பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென ஜுலை 22ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செவ்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு அறிவித்திருந்தது.

இதற்கமைய, பொதுவேட்பாளர் தெரிவானது, எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு மாகாணத்தில் இருந்து பொதுநிலை பெண், பொது நிலை ஆண், வடக்கு மாகாணத்தில் இருந்து பொது நிலை பெண், பொது நிலை ஆண், கிழக்கு மாகாணத்தில் இருந்து அரசியல் தரப்பு பெண், அரசியல் தரப்பு ஆண் மற்றும் வடக்கு மாகாணத்தில் இருந்து அரசியல் தரப்பு பெண், அரசியல் தரப்பு ஆண் என முன்னுரிமை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கில் முன்மொழியப்படுபவர்கள், மேலதிகமாக அவர்களின் அறிவு, அனுபவம், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதித்தன்மை போன்ற பல விடயங்களை பட்டியலிட்டும் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்படுவர்.

இதனைத்தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட பெயர்களுக்குரிய நபர்களை தொடர்புகொண்டு அவர்களின் விருப்பம் குறித்து வினவப்படும்.

இதனை தொடர்ந்து, அவர்கள் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அதில் யார் மிகப்பொருத்தமானவர் என ஆராய்ந்து, விவாதித்து முடிவெடுக்கப்படும் என தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது.

இதற்கமைய, பொதுவேட்பாளரிற்காக இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் கீழ்வருமாறு,

1. நீதிபதி – சந்திரமதி – கிழக்கு பொதுநிலை
2. நீதிபதி – இளஞ்செழியன் – வடக்கு பொதுநிலை
3. லோகநாதன் – அம்பாறை வர்த்தக சங்க தலைவர்
4. வரதராஜன் – அம்பாறை சிவில் சமூக தலைவர்
5. தண்டாயுதபாணி – கிழக்குமாகாண முன்னாள் கல்வி அமைச்சர்
6. சட்டத்தரணி ரட்ணவேல் – பொது நிலை
7. சட்டத்தரணி தவராசா – பொது நிலை
8. சட்டத்தரணி புவிதரன் – பொது நிலை
9. பேராசிரியர் சிற்றம்பலம் – பொது நிலை
10. ஓய்வுபெற்ற அதிபர் பி.கே.சிவலிங்கம் – பொது நிலை
11. துரைரட்ணம் – அரசியல்
12. கென்றி – அரசியல்
13. ஜனா – அரசியல்
14. சுரேஸ் பிறேமச்சந்திரன் – அரசியல்
15. செல்வம் அடைக்கலநாதன் – அரசியல்
16. சித்தாத்தன் – அரசியல்
17. துளசி – அரசியல்
18. வேந்தன் – அரசியல்
19. ஐங்கரநேசன் – அரசியல்
20. சிறீகாந்தா – அரசியல்
21. சிவசக்தி ஆனந்தன் – அரசியல்
22. வெள்ளிமலை – அரசியல் கிழக்கு
23. அரியநேந்திரன் – அரசியல் கிழக்கு
24. சிறிநேசன் – அரசியல் கிழக்கு
25. சி.வி.விக்ணேஸ்வரன் – அரசியல் வடக்கு
26. ராமகிருஸ்ணன் – பொது நிலை
27. லோகநாதன் – பொது நிலை
28. குருநாதன் – பொது நிலை
29. டொக்டர் சந்திரகாந்தா – பொது நிலை
30. சந்திரகாந்தன் சந்திரநேரு – அரசியல் கிழக்கு
31. பேராசிரியர் மொனகுரு – பொது நிலை
32. சித்திரலேகா மௌனகுரு – பொது நிலை
33. அரசாங்க அதிபர் உதயகுமார் – பொது நிலை
34. பேராசிரியர் ஜெயசிங்கம் – பொது நிலை
35. முன்னாள் துணைமுதல்வர் செல்வராஜா – பொது நிலை
36. டொக்ரர் தில்லைநாதன் – பொது நிலை
37. லீலாவதி – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் – பொது நிலை
38. அனந்தி சசிதரன் – அரசியல்
39. சிவாஜிலிங்கம் – அரசியல்
40. சசிகலா ரவிராஜ் – அரசியல்
41. சந்திரகாசன் – பொதுநிலை
42. செல்வின் இரேனியல் – பொது நிலை
43. சிவயோகநாதன் சீலன் – பொது நிலை
44. வசந்தராஜா – பொது நிலை
45. நிலாந்தன் – பொது நிலை

-(3)

Related News
July 30

ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்திய 92 எம்.பிக்கள்!
July 29

Share.
Leave A Reply

Exit mobile version