கடலூர்: விருதாச்சாலம் பள்ளியில் நடந்த சம்பவம், பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை தந்து வருகிறது.
இது தொடர்பான விசாரணையை இன்றைய தினமும் போலீசார் கையில் எடுத்து வருவதால், கடலூர் மாவட்டமே கதிகலங்கி கிடக்கிறது.
சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. தமிழக அரசும் பெண் பிள்ளைகளை காப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..
தமிழக போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்.. அப்படி இருந்தும் பாலியல் வழக்குகள் பெருகி வருகின்றன..
ஆசிரியைகள்: அதிலும், கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் போக்சோவில் கைதாவது அதிர்ச்சியை தந்துவருகிறது.
சிலசமயம், ஆசிரியைகளே போக்சோவில் கைதாகி விடுவது, அதைவிட வெட்கக்கேடானது.. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இப்படியானகுற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை..
அப்படியானால் போக்சோவைவிட தீவிரமான, கடுமையான சட்டங்களே அதிகம் தேவை என்பதையே அழுத்தமாக நாம் வலியுறுத்த வேண்டி உள்ளது…!
விருத்தாசலம் அருகே எருமனூர் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் எடில் பெர்ட் பெலிக்ஸ்.. 45 வயதாகிறது.. இவர் கடலூரை சேர்ந்தவர்..
இவர் நேற்று தன்னுடைய செல்போனில் மாணவி ஒருவரின் போட்டோவுக்கு முத்தம் தருவதுபோல ஸ்டேட்டஸ் வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்த மாணவி, கடந்த வருடம் இவரிடம் படித்தவராம்.. அவருக்கு முத்தம் கொடுப்பது போல் போட்டோ ஒன்றை தனது செல்போனில் வைத்ததுமே,
ஆத்திரமடைந்து நேற்று மாலையே ஸ்கூலுக்கு சென்றுள்ளனர். அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி, அவரது ஆடைகளை கிழித்தெறிந்தனர்..
அவரது ரூமிலிருந்து அவரை ஜட்டியுடன் வெளியே இழுத்து வந்தனர்.. பள்ளி வளாகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம்வரை அவரை தாக்கிக்கொண்ட சென்றார்கள்.
அதற்குள் தகவலறிந்து விருத்தாசலம் போலீசார் வந்துவிட்டனர்.. தலைமை ஆசிரியரை மீட்டு பொதுமக்களிடமிருந்து மீட்டு, பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோதே, உறவினர்களும், இளைஞர்களும் ஆவேசம் குறையாமல், விருத்தாசலம் – எருமனூர் சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். தாசில்தார்: இதற்கு பிறகு, தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர், பொதுமக்களிடம் சமாதானம் பேசி, இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக உறுதி தந்தார்கள்..
அதற்கு பிறகே, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கு பிறகு தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸை, போலீசார் விருத்தாசலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.