“உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில், மது போதையில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் மீது ரெயில் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நபர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சிடைந்த ரெயில் ஓட்டுனர், இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தண்டவாளத்தில் ஆய்வு செய்தபோது, நபர் ஒருவர் படுத்திருந்தது தெரிந்தது.

அருகில் சென்ற பார்த்தபோது அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.பின்னர், அந்த நபரை எழுப்பி அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தபோது அவர் குடிபோதையில் இருப்பதும், தண்டவாளம் என்றுக்கூட தெரியாமல் படுத்து உறங்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இருப்பினும், அவர் மேல் ரெயில் ஒன்று கடந்து சென்றும் அந்த நபருக்கு எந்த சேதமும் ஏற்படுத்தாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,

அந்த நபர் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. “,

Share.
Leave A Reply

Exit mobile version