யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள்கள், 4 பெற்றோல் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)

Share.
Leave A Reply

Exit mobile version