“துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச் சாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கேன் அட்டால் கைதாகி சிறையில் உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக் பேசும்போது,

அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சியை “பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டார். உங்களுக்கு [ஆளும் கட்சி] ஆதரவாக இல்லையென்று கேன் அட்டாலை பயங்கரவாதி என்கிறீர்கள்.

ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனால் ஆளும் கட்சி எம்.பிக்கள் தரப்பில் கூச்சல் எழுந்தது. ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார்.

தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர் துணை சபாநாயகர் சொல்லச் சொல்ல கேட்காமல் எம்.பி.க்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

அவர்களை பாது காப்பு அதிகாரிகள் விலக்கி விட்டனர். இந்த தாக்குதலில் பெண் எம்.பி. ஒருவர் உட்பட சிலருக்குக் காயம் ஏற்பட்டது.

இதில் சிலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றமே களேபரமாகக் காணப்பட்டது.”,

Share.
Leave A Reply

Exit mobile version