ஹிகுருகடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 7 வயதுடைய சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வேலை செய்த கொத்தனாரின் உதவியாளராக வந்த சந்தேக நபர் பல தடவைகள் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சிறுவனின் தந்தை வியாழக்கிழமை (22)அன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version