தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டதற்கு யூடியூபரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் பைக்கில் பயணம் செய்தபடி பணத்தை தூக்கி எறிவதை காணலாம். மற்றொரு வீடியோவில், அவர் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விட்டதை காணலாம்.


இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர்.

சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் கடும் போக்குவரத்து நெரிசல், திடீரென ஏற்படக்கூடிய விபத்துகள் குறித்து கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். யூடியூபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக வலைதள பயனாளர்கள் சைபராபாத் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version