இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல்வர் யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1,36,463 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 33 சதவீதம் பேர் நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் சிறப்பாகச் செயல்படும் முதல்வராகக் கருதுகின்றனர்.
13.8 சதவீதம் பேர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
9.1 சதவீதம் பேர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை விரும்புகின்றனர்.
4.6 சதவீதம் பேர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
உ.பி முதல்வர் 33 சதவீத ஆதரவு பெற்று முதலிடத்தில் இருந்தாலும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்ற 51 சதவீத ஆதரவிலிருந்து சறுக்கியுள்ளார். இதற்கு மக்களவைத் தேர்தல் தோல்வியும், தற்போது உ.பி பாஜகவில் ஏற்பட்டுள்ள விரிசலுமே காரணம் என்று கூறப்படுகிறது.