சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், சமீபத்தில் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆவார். இவர், சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்கள் மட்டும் இன்றி, தென்னிந்திய நடிகர்களும் அண்மை காலமாக தேசிய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.

இந்த சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், சமீபத்தில் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிய தெலுங்கு சினிமா நடிகர் ஆவார். இந்த சூப்பர் ஸ்டார், சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சுமார் 1,650 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ளார்.

தற்போது உங்கள் மனதில் தோன்ற ஆரம்பித்திருக்கும் ரஜினிகாந்த், பிரபாஸ், அல்லு அர்ஜுன் அல்லது நாகார்ஜுனாவாக இருக்கலாம் என்று. ஆனால் அதுதான் இல்லை.

தென்னிந்திய மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,650 கோடி. இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் வசூலித்த முதல் இந்திய நடிகர்.

ஆபத்பாந்தவுடு (1992) படத்திற்காக சிரஞ்சீவி 1.25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் அந்த நேரத்தில் திரையுலகில் அதிக சம்பளம் பெற்றவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். அவர் நடித்த ‘கரானா மொகுடு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடி வசூலித்த முதல் தெலுங்குப் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

மேலும், அந்த காலக்கட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனை விட அதிக சம்பளம் சிரஞ்சீவி வாங்கியுள்ளார். அமிதாப் பச்சன் 90 லட்சத்திற்கும் குறைவாகவே சம்பளம் பெற்றுள்ளார்.

தற்போது சிரஞ்சீவி ‘விஸ்வம்பர’ படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் அமைந்துள்ள 25,000 சதுர அடி கொண்ட ஒரு ஆடம்பரமான மாளிகையில் வசித்து வருகிறார். அதன் மதிப்பு ரூ.30 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சிரஞ்சீவிக்கு பெங்களூரு மற்றும் சென்னையிலும் ஆடம்பர சொத்துக்கள் உள்ளன.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version