சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் இருந்து வந்தவர் கிளிநொச்சியில் மாயம்; நடந்தது என்ன ! | A Person From Canada Was Kidnapped In Kilinochchi

குறித்த நபர் திருமணம் செய்த நிலையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், அவர் காணாமல் போன தினத்துக்கு முதல்நாள் அவரது நண்பர் அவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று அவரது வீட்டில் விட்டதாக தெரிவிக்கின்றார்.

அதேசமயம் அவரது வீட்டில் சிசிடிவி கேமராவின் தேக்கவியல் (server) சாதனமும் காணாமல் போயுள்ளதுடன் அவரது தலைக்கவசம் உடைந்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version