குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதைப்போலத் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

விஸ்வமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.

Gujrat k liye dua karein, halaat bahut kharab hain. #GujaratFlood pic.twitter.com/kh57l595qN— Neel (@Neel_1231) August 29, 2024 அஜ்வா அணை நிரம்பியதை அடுத்து ,அதிலிருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்த 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது.

மாடுகளை முதலைகள் இழுத்துச்சென்று விடுவதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. வெள்ளை நீர் வடிய வடிய இங்கு புகுந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

இதுவரை 40 க்கும் மேற்பட்ட முதலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஷூட்டரில் பின்புறம் அமர்ந்துள்ள நபர் முதலையைக் கையில் வைத்திருக்க மற்றொரு நபர் சாலையில் பிரதான சாலையில் வண்டியை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version