“உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தனது காதலியை சந்திக்க இளைஞர் ஒருவர் பர்தா அணிந்து வந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மொராதாபாத்தில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் சந்த் புரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது காதலியை சந்திக்க பர்தா அணிந்து வந்துள்ளார். அவரது நடத்தையில் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஒரு சிலர் அவரை திருடன் என்றும் மற்றவர்கள் அவரை குழந்தை கடத்தல்காரராக இருக்கலாம் என்றும் நினைத்து, பர்தாவை கழற்ற சொல்கின்றனர்.

பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த கும்பல் அந்த இளைஞரிடம் ஆதார் அட்டையை காட்டுமாறு கூறி தாக்குகின்றனர்.

போலீசார் வரும் வரை சிறைபிடித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞரை ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version