உக்ரைன்-ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா இன்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேர் காயமடைந்தனர் இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 49 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ரஷியா 2 பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், இது காட்டுமிராண்டித்தனமான செயல் என தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version