கிளிநொச்சி – ஏ 9 வீதியின் பரந்தன் பகுதியில் நேற்று இரவு வேகக் கட்டுப்பட்டை இழந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .
கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கிச் சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிக வேகத்தில் சென்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்