பங்களாதேசத்தின் St Martin’s Island என அழைக்கப்படும் வங்காள விரிகுடாலில் உள்ள சிறு தீவை அமெரிக்காவிற்கு கொடுக்க மறுத்ததால் ஷேக் ஹசீனா பேகம் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டதா?

வங்களா விரிகுடாவில் மியன்மாருக்கு (பர்மா) அண்மையாக உள்ள எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட St Martin’s Island என்னும் ஒரு சிறிய தீவு இருக்கின்றது. அது பங்களாதேசத்திற்கு சொந்தமானது. அதற்கு மியன்மாரும் உரிமை கோருகின்றது.


St Martin’s தீவில் படைத்தளம் அமைக்கும் உரிமையை அமெரிக்கா பங்களாதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்த ஷேக் ஹசீனா பேகம் கோரி வந்ததாக 2023 ஜூன் மாதம் பங்களாதேசத்தின் உழைப்பாளர் கட்சியின் டக்கா-8 தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரஷிட் கான் மேனன் தெரிவித்திருந்தார்.

மேலும் மேனன் அவர்கள் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான QUAD என்னும் கூட்டமைப்பில் பங்களா தேசமும் இணைய வேண்டும் என நிர்ப்பந்தித்தாகவும் சொல்லியிருந்தார்.


அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிடில் அவர்கள் பங்களா தேசத்தில் ஆட்சியை ஆட்டம் காண வைப்பார்கள் எனவும் மேனன் எச்சரித்திருந்தார்.

13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால் பல வங்காளி மக்கள் காளியம்மனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

அதனால் தற்போது பங்களாதேசம் இருக்கும் பிரதேசம் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகவும் தற்போதைய மேற்கு வங்கம் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகவும் உருவாகின.

இதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவில் இருந்து பிரியும் போது மேற்கு வங்கம் இந்தியாவுடனும் தற்போதைய பங்களாதேசம் பாக்கிஸ்த்தானுடனும் இணைக்கப்பட்டன.

முஜிபுர் ரஹ்மான்

பங்களா தேசம் விடுதலையான பின்னர் ஷேக் ஹசினா பேகம் அவர்களின் தந்தையும் தலைமை அமைச்சருமான முஜிபூர் ரஹ்மானை படைத்துறையினர் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினர்.

அந்தச் சதிக்கும் பின்னால் அமெரிக்கா இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதன் பின்னர் பங்களாதேசத்தின் பல இரத்தக் களரி மிக்க ஆட்சி மாற்றங்கள் நடந்தன:
1975 நவம்பர் மேஜர் ஜெனரல் காலித் மொசராஃப் ஆட்சியைக் கைப்பற்றினார். 1977–1980 பல ஆட்சி மாற்ற முயற்ச்சிகள்.

1982 லெப்டினண்ட் ஜெனரல் ஹுசேன் மொஹமட் எர்சாட் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1996 சதி முயற்ச்சி.
2007 காபந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி
2009 கிளர்ச்சி
2011 சதி முயற்ச்சி
2024 மாணவர் எழுச்சி

ஷேக் ஹசினா பேகம் பங்களாதேசத்தின் ஆட்சி தனக்கு மட்டும் சொந்தமானது என்பது போல ஆட்சி செய்தார். எதிர்க்கட்சியினரை அடக்கினார்.

சுதந்திரப் போராட்ட த்தில் ஈடுபட்டவர்களுக்கு அரச பதவிகளில் முப்பது விழுக்காடு என பங்களாதேசத்தின் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாட்டைப் பயன்படுத்து தனது கட்சியினரை அரச பதவிகளில் அமர்த்தினார். மாணவர் அமைப்பு என்னும் பெயரில் ஒரு காடைக்கும்பலையும் வழி நடத்தினார்.


St Martin’s Island என்னும் பவளப் பாறைத் தீவின் அமெரிக்கா படைத்தளம் அமைத்தால் அதில் இருந்து பங்களாதேசம், மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல் கொடுக்க முடியும்.

மியர்மாரில் சீனாவின் ஆதிக்கத்தையும் சமாளிக்க முடியும். தொடர்ச்சியான விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் நெருக்கடி, வலுவிழந்த வங்கித்துறை, ஏற்றுமதியிலும் அதிகமான இறக்குமதி, குறைந்து செல்லும் அந்நியச் செலவாணிக் கையிருப்பு ஆகியவை மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழ வைத்தது. வளர்முக நாடுகளில் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவது அமெரிக்காவிற்கு கைவந்த கலை எனச் சொல்லலாம்.

இந்தியாவும் பங்களாதேசமும்

பங்களாதேசம் இந்தியாவுடன் 54 நதிகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்தியாவில் இருந்து பங்களாதேசத்திற்கு செல்லும் கங்கை, பிரம்மபுத்திரா, ஆகிய நதிகள் பங்களாதேசத்தின் 1.72மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடை நீர்ப்பிடி பிரதேசத்திற்கு நீர் வழங்குகின்றது.

பங்களாதேசத்தின் உணவு உற்பத்தி பிரம்மபுத்திரா, கங்கை நதிகளின் வடிநிலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் நீர்ப்பங்கீடு, எல்லை போன்றவை தொடர்பான பல முரண்பாடுகள் உள்ளன.

இந்தியாவுடன் உறவை சீர் செய்ய பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக பங்களாதேசம் பல நடவடிக்கைக்களை மேற்கொண்டது.

மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்து வங்காளிகளுக்கும் பங்களாதேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு.

வங்காளிகள் மதத்திலும் பார்க்க இன மற்றும் மொழி உணர்வுகளால் அதிகம் பிணைக்கப் பட்டுள்ளார்கள்.

பங்களாதேசப் பிரிவினைக்கு முன்னர் கிழக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள வங்காளிகளுக்கு அட்டூழியம் நடந்த போது மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகள் கிளர்ந்து எழுந்தனர்.

பங்களாதேசமும் இந்தியாவும் 4000கிலோ மீட்டர் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இது உலகின் ஐந்தாவது நீளமான எல்லையாகும்.

மியர்மார், வங்கக்கடல் தவிர பங்களாதேசத்தின் மூன்று திசைகளில் இந்திய எல்லைகள் இருக்கின்றன.

இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்களாதேசத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. சீனாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஏழையும் இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பையும் இணைக்கும் சில்குரி இணைப்புப் பாதை மிகவும் சிறியது என்றபடியால் அது கோழிக்கழுத்து என அழைக்கப்படுகின்றது.

இதை சீனா கைப்பற்றினால் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, நாகலாந்து, மணிப்புரி ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படும்.

அப்படி ஒன்று நடக்கும் போது இந்திய பங்களா தேசத்தின் ஊடாகவே தனது விநியோகங்களை அந்த ஏழு மாநிலங்களுக்கும் செய்ய முடியும். அந்த மாநிலங்களை சீனாவால் இலகுவாக கைப்பற்ற முடியும்.

பங்களாதேசமும் இலங்கையைப் போல் அமெரிகா, சீனா, இந்தியா ஆகிய அயோக்கிய நாடுகளின் போட்டிக் களமாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version