அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினைகொலை செய்வதற்கு மீண்டும் முயற்சி

இடம்பெற்றதாகதாகவும் அதனை முறியடித்துள்ளதாகவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.

புளோரிடாவின் வெஸ்ட்பாம் பீச்சில் கோல்வ் விளையாடுவதற்காக டிரம்பை சென்றவேளை கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் காணப்படுவதை அவதானித்த இரகசிய சேவை பிரிவினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

ரயான் வெஸ்லே ரூத் என்ற 58வயது நபரே டிரம்பினை கொல்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனின் சார்பில் போரிடுவதற்காக வெளிநாட்டவர்களை சேர்க்க முயன்றார் உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புளோரிடாவின் கோல்ப்மைதானத்தில் டிரம்பினை கொலை செய்வதற்கு இந்த நபர் முயற்சிசெய்தார் என எவ்பி ஐ அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மைதானத்தில் புதர்கள் காணப்பட்ட பகுதிக்குள் ஏகே 47 துப்பாக்கி தெரிவதை பார்த்த இரகசிய சேவை பிரிவினர் உடனடியாக துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டனர்.

சந்தேகநபர் காரில் தப்பியோடினார் அவரை துரத்திச்சென்ற இரகசிய சேவை பிரிவினர் 38 மைல்களிற்கு அப்பால் அவரை கைதுசெய்தனர்

டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது இலக்குவைக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version