உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் தனது கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆக்ராவை சேர்ந்த பெண் கூறுகையில், அவரது கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார். இதனால் அவர் மீது பொறுத்துக்கொள்ள முடியாத உடல் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் திருமணமாகி நாற்பது நாட்களுக்கு பிறகு திருமணத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவரான ராஜேஷ் புனிதமான கங்கை நதியில் (கங்காஜல்) வரும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை தெளித்துக் கொள்கிறார்.

திருமணமாகி மனைவியின் வற்புறுத்தலால் 40 நாட்களில் 6 முறை குளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் புகாரை போலீசில் பதிவுசெய்து விவாகரத்து கோரி உள்ளனர்.

இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இறுதியில் கணவர் மனந்திருந்தி, அவரது தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், அந்த பெண் கணவருடன் இனி வாழ விரும்பவில்லை என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தம்பதியினர் ஆலோசனை மையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version