வட கொரிய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

அந்நாட்டின் சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருவரும் சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி செல்ல வைக்க உதவி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் சீனாவால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட சுமார் 500 வட கொரியர்களில் 39 வயதான ரி மற்றும் 43 வயதான காங் என இருவரும் அடங்குவர்.

இதே போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ரேடியோ ஃபிரீ ஆசியா வெளியிட்டுள்ள தகவல்களில் பொது வெளியில் உள்ள சந்தையில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், ரி மற்றும் காங் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக இருவர் செய்த குற்றம் தொடர்பாக ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நீடித்தது. அன்றைய நாள் காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை, அதே நாளில் ஹம்கியோங் மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இரண்டு பெண்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version