“ராஜாஸ்தானில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு பாஜக எம்எல்ஏ கோமியம் [மாட்டின் சிறுநீர்] தெளித்து அதை குடிக்க வைத்து நடத்திய [சுத்தப்படுத்தும்] சடங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டால் காங்கிரசை சேர்ந்த ஜெய்ப்பூர் முனிசிபல் கவுன்சிலர் பதவி விலகிய நிலையில் அந்த பதவிக்கு பாஜகவை சேர்ந்த குசும் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மேயராக பதவியேற்றுக்கொள்ளும் விழா சமீபத்தில் நடந்துள்ளது.

இந்த அரசு விழாவுக்கு தலைமை தாங்கிய பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியத்தையும் கங்கை நீரையும் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார்.

அந்த சடங்கில், சமீபத்தில் பாஜக பக்கம் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து அதை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார்.

இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில் அங்கு நடந்த ஊழலை சுத்தப்படுத்தவே இந்த சடங்கை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version