இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பணயக் கைதிகளை மீட்பது போன்ற சாகசங்களையும் விமானப்படை வீரர்கள் செய்து காட்டினர்.
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்


சாகசங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள்

இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் விமான சாகசங்களை நேரில் பார்க்க கூடியிருந்தனர். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் குவிந்த மக்கள்

வானில் சாகங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை போர் விமானம்

உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருக்கிறது

லிம்கா புத்தகத்தில் இந்த சாகச நிகழ்வு இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்தது.

இந்திய விமானப்படை நிகழ்ச்சியில் சாகசங்களை செய்து காட்டிய போர் விமானங்கள்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருப்பதாகவும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை காட்டும் சில புகைப்படங்களை பார்க்கலாம்.



சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் ஒரு காட்சி.

Share.
Leave A Reply

Exit mobile version