உயிரோடு இருக்கும்போது தனக்கு துரோகம் செய்த கணவனின் சாம்பலை சாப்பிட்டதாக கனேடிய எழுத்தாளர் தனது சுயசரிதையில் எழுதியுள்ள சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் கனேடிய எழுத்தாளர் ஜெசிகா வைட் [Jessica Waite] இறந்த பாஸ்டர்ட்ஸ்கான ஒரு விதவையின் வழிகாட்டி [A Widow’s Guide to Dead Bastards] என்ற பெயரில் எழுதியுள்ள அவரது memoir வகை சுயசரிதை நினைவுக் குறிப்பு புத்தகம் சமீபத்தில் வெளியானது.
அதில் தனது கணவன் சீன் வைட் [Sean Waite] தன்னை ஏமாற்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, அதை தான் கண்டுபிடித்தது, அவர் கடந்த 2015 இல் இறந்தபிறகு நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டில் டெக்சாஸ்-கு வேலை நிமித்தமாக சென்ற கணவர் உயிரிழந்தார்.
அவரது உடல் எங்கிருக்கிறது என்பது பற்றி கேட்க ஹவுஸ்டன்[Houston] நகர மருத்துவமனையில் அலைபேசி எண்ணை பற்றி தேடுவதற்காக எனது கணவரின் ஐ- பாட் -ஐ எடுத்துக் பார்த்தேன்.
ஹவுஸ்டன் என்று தேடியதும் அவரது பிரவுசிங் ஹிஸ்டரியில் ஹவுஸ்தண் எஸ்கார்ட்ஸ் [escorts][பாலியல் துணைகள்] பற்றி எக்கச்சக்கமான விசயங்கள் இருந்தது.
பல்வேறு இடங்களில் உள்ள எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை தெரிந்துகொண்டேன்.
அதன்மூலம் எனது கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாக இருந்ததையும் கண்டுபிடித்தேன்.
எஸ்கார்ட் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கென்றே கொலோராடோவில் [Colorado] அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தும் எனக்கு தெரியவந்தது.
அவர் இறந்த துக்கம் ஒருபுறம், அவரை பற்றி தெரிந்துகொண்டதால் ஏற்பட்ட கோபமும் விரக்தியும் ஒருபுறம் என்று நான் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்தேன்.
எனவே இறுதிச் சடங்கு முடிந்தவுடன் என்னிடம் தரப்பட்ட அவரது உடலின் சாம்பலை வீட்டுக்கு வந்து தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன்.
எனது ஆத்திரம் அடங்கவில்லை. எனவே மேற்கொண்டு அந்த சாம்பலை சாப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதன் சுவை எப்படி இருந்தது என்று விலாவரியாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அதாவது, கணவரின் சாம்பல் பேக்கிங் பவுடரை விட சொரசொரப்பாகவும், உப்பை விட தூசியாகவும் இருந்தது.
எனது நாக்குக் கீழ் சுரந்த உமிழ்நீரில் கலந்த சாம்பலை நான் விழுங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய துணையை தான் தேடிக்கொண்டாலும், உயிரிழந்த கணவரை நினைக்காத நாளில்லை என்று தேர்விற்கும் ஜெசிகா, தனது உடலில் ஒரு பாகம் காணாமல் போனது போல் உணர்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.