நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்துக்கு அருகில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிறிய லொறியே மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் .
இதனையடுத்து, சடலம் மந்திகை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விபத்தின்போது லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.