“பாபா சித்திக்
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி முக்கியப் புள்ளியான பாபா சித்திக் நேற்று முன்தினம் [சனிக்கிழமை] சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வரும் இந்த கும்பல் சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக்கின் கதிதான் ஏற்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.
அடுத்த தாவூத்
மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு அடுத்தபடியாக லாரன்ஸ் பிஷ்னோய் தாதா கும்பல் எந்த சட்டத்துக்கும் பயப்படாமல் துணிச்சலாக இயங்கி வருவதையே பாபா சித்திக் கொலை காட்டுகிறது.
நாட்டில் உயர்மட்டத்தில் நடக்கும் பல்வேறு குற்றச்செயல்களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயர் அடிபடுவதை சாதரணமாக பார்க்கலாம்.
பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே பொறுப்பு.
நெட்வொர்க்
இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு என வட இந்தியாவில் மிகபெரிய தாதா கும்பலாக லாரன்ஸ் பிஷ்னோய் இயங்கி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பான [என்ஐஏ] தெவிர்த்துள்ளது.
பிஷ்னோய் உட்பட இந்த கும்பலில் உள்ள 700 பேரில் 300 பேர் பஞ்சாபை சேர்த்தவர்கள் என்றும் என்ஐஏ தற்போது உபா சட்டத்தின்கீழ் வெளியிடுயுள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
லாரன்ஸ் 31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி [Dhattaranwali] கிராமத்தில் வசதி படைத்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்,
இவரின் பிஸ்னாய் சமுதாயம் பஞ்சாப் , அரியானா, மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
சண்டிகரில் கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலை மறைப்பாக வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடத்தொடங்குள்ளார் லாரன்ஸ். 2010 ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது.
அதுவும் ஓரூ கொலை முயற்சி வழக்கு. இவ்வாறு குற்றச்செயலுக்காக ஒரு குவளை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் அதை விரிவுபடுத்தியுள்ளார்.
ராக்கி இதற்கு ராக்கி எனப்படும் ஜஸ்விந்தர் சிங் நெருங்கிய கூட்டாளியும் பஞ்சாப் பசில்காவை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியின் உதவியும் முக்கிய காரணம்.
இந்த ராக்கி கடந்த 2020 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறிவைத்து இயங்கும் லாரன்ஸ் பிஸ்னாய் கும்பல் மற்ற கும்பல்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள நெட்வொர்க்களுடனும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புள்ளதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு படை கூறுகிறது.
சமூக வலைத்தளங்கள் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக என்ஐஏ கூறுகிறது.
சிறை ஆள் கடத்தல், காண்டிராக்ட் கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் சிறைகளில் இருந்தும்கூட நெட்வொர்க்கிங் மூலம் செயல்பட்டவரே இருக்கின்றனர் கடந்த 2015 இல் லாரன்ஸ் பிஷ்னோய் கைதுசெய்யப்பட்டு தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் உள்ளார்.
இருந்தபோதும் அவரின் கும்பலின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடப்பதன்மூலம் அந்த கும்பல் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை யூகிக்க முடியும்.
கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஸ்னாய் கொலை மிரட்டல் விடுத்தார்.
அதன்மூலமே அவர் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார். 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கியதை அடுத்து இந்த கொலை மிரட்டல் வந்தது.
இந்து மதத்தின் பசு புனித விளங்காக உள்ளதுபோல் லாரன்ஸின் பிஷ்னோய் சமூகத்தில் கரும்புலி மான் என்பது புனித விலங்காகும். சல்மான் கான் அதை வேட்டையாடினர் என்பதனால் லாரன்ஸ் அவருடன் பகையை வளர்த்துக்கொண்டார்.
அதுமுதல் பல்வேறு சமயங்களில் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறிவைத்து வருகிறது.
சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் தற்போது பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “,