“உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை.இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது.
இதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்திருந்தார்.
அப்போது சமையல் வேலையும் செய்யும் பெண் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார்.
சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சமையல் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்து தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த சமையல் பணிப்பெண் 8 வருடமாக வேலை செய்து வருகிறார். இருந்த போதிலும் முதலாளிக்கு எதிராக இப்படி ஒரு அருவருப்பான வேலையை செய்துள்ளார்.
இதனால் அந்த தொழில் அதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் குற்றச்சாட்டை மறுத்த அந்த பணிப்பெண், வீடியோவை காண்பித்ததும் அமைதி காத்தார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.”,
गाजियाबाद, यूपी में रसोई के बर्तन में पेशाब करने का Video –
घरेलू सहायिका रीना गिरफ्तार है !! https://t.co/snT4sVWDHh pic.twitter.com/9FyU4nzSWG
— Sachin Gupta (@SachinGuptaUP) October 16, 2024