ரயில்வே கிராஸிங்குகளை கடக்கும் போதும், தண்டவாளங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களை ஏன் போட்டு வைத்திருக்க வேண்டும்? இதற்கான காரணத்தை சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியாவின் முதல் தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட விமானத்தில் உள்ளதை போலவே, அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

“மத்திய அரசு பாணியில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் 53 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.. பறந்த கோரிக்கை ” அதேபோல, குடிநீர், உணவு, ஸ்நாக்ஸ் போன்ற வசதிகள் தேவைக்கு ஏற்ப கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

இப்படி பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தவும் இந்தியன் ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது.

ரயில்வே தண்டவாளம்: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பொதுமக்கள் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்களும் ரயில்வேயில் உள்ளன. அந்தவகையில், ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா? இந்த ஜல்லி கற்களால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ரயில் தண்டவாளங்களில் கொட்டப்பட்டுள்ள கருங்கல் ஜல்லிக்கு “ட்ராக் பேலாஸ்ட்” (Track Ballast) என்று பெயர். ரயில் தண்டவாளங்களை வைப்பதற்கான தளமாக இது கருதப்படுகிறது. அதாவது தரையின் மீது நொறுக்கப்பட்ட கற்களை கொட்டி, தளம்போல அமைத்து, அதற்கு மேல், ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.

தண்டவாளம்: காரணம், ரயில் தண்டவாளங்களில் நீர் புகுந்துவிட வாய்ப்புள்ளது.. இந்த நீரில் இரும்பு தண்டவாளங்கள் மூழ்கியே கிடந்தால் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, ரயில் தடங்களை சரியான இடத்தில் வைத்திருக்கவும், தண்ணீர் அடிக்கடி இருப்பு பாதையில் செல்வதையும் இந்த ஜல்லி கற்கள் தடுத்துவிடுகின்றன.. இதனால், இருப்புப்பாதைக்குள் நீர் புகுவது குறைக்கப்படுகிறது.. தேவையற்ற செடிகள் வளர்வதும் தடுக்கப்படுகிறது.. ரயிலின் அதிக சத்தத்தையும் குறைக்கிறது.

அதேபோல, ரயில் செல்லும்போது மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும்.. இதனால் அங்கிருக்கும் கட்டிடங்கள் பாதிக்கப்படலாம்.. இதுபோன்ற கருங்கற்களை கொட்டி வைத்திருப்பதால், அதிர்வுகளை பெரிதாக கடத்த விடாமல், தனக்குள்ளேயே உள்வாங்கிக் கொள்கின்றன.

கூழாங்கற்கள்: அதற்காக எந்த ஜல்லி கற்களை வேண்டுமானாலும் இதற்கு பயன்படுத்த முடியாது.. ஆற்றுப்படுகைகள் அல்லது மென்மையான, வட்டமான கூழாங்கற்களை உடைத்து, தண்டவாளங்களில் கொட்ட முடியாது.. அப்படி செய்தால் விபத்துதான் ஏற்படும்.. உறுதியுடன், அதிகம் நகராத, தண்டவாளத்தில் கூர்மையான விளிம்புகள் கொண்ட கற்கள் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

குறைந்தபட்சம் 6 இன்ச் அளவுக்கு இந்த கற்களை கொட்டித் தளம் ஏற்படுத்தப்படும். ஆனால், நிலத்தின் தன்மையை பொறுத்து, இந்த அளவுகோல் மாறுபடலாம். அதிக கட்டிடங்களை கொண்ட இடம் என்றால் 12 இன்ச் அளவுக்காவது ஜல்லி கற்களை கொட்டலாம்.

கூர்மையான கற்கள்: கற்கள் கரடுமுரடாக இருந்தால்தான், ரயிலுக்கான இறுக்கம் கிடைக்கும்.. ஒவ்வொரு கற்களும் கூர்மையாக வேண்டும்.. ஓரே அளவுடன் இருக்க வேண்டும். தண்டவாளங்களில் எங்குமே இடைவெளி இல்லாமல் நிரப்பியிருக்க வேண்டும். ஒருவேளை கற்கள் பழையதாகிவிட்டால், அதனை அகற்றிவிட்டு, புதிய கற்களை கொட்ட வேண்டும். இதற்காகவே, Ballast Cleaning Machines (BCM) என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version