வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநயாக கட்சி சார்பில் கமலா ஹாரீசும் போட்டியிடுகிறார்கள். அதிபர் ஜோ பைடன் முதலில் போட்டி களத்தில் இருந்த போது, டிரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருந்தது.

ஜோ பைடன் பிரசாரத்தில் தடுமாறியதன் காரணமாக அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக்கபட்டார்.

இதையடுத்து, டிரம்புக்கும் கமலா ஹாரீஸுக்கும் இடையே அதிபர் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக உலக பெரும் பணக்கரரான எலான் மஸ்க் உள்ளார்.

டிரம்பிற்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்து இருக்கும் எலான் மஸ்க், தனது எக்ஸ் தளத்திலும் தொடர்ச்சியாக டிரம்பிற்கு ஆதரவக பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார் எலான் மஸ்க்.

அதாவது, ஆன்லைனில் தான் உருவாக்கியிருக்கும் பெட்டிஷனில் கையெழுத்திடும் நபர்களை ரேண்டமாக தேர்வு செய்து தினமும் ஒரு நபருக்கு தேர்தல் முடியும் வரை 1 மில்லியன் டாலர் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டிரம்ப் பிரசார குழுவிற்கு உதவி அளிக்கும் வகையில், America PAC’s என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார்.

இதில் உருவாக்கப்பட்டு இருக்கும் பெட்டிஷனில் கருத்து சுதந்திரம் மற்றும் ஆயுதங்கள் வைத்து இருக்கும் உரிமை ஆகியவற்றிக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திடும் நபர்களில் தினமும் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு 1 மில்லியன் டாலர் கொடுக்க இருக்கிறார் எலான் மஸ்க்

அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு இதை கொடுக்க இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

அறிவிப்போடு நிற்காமல் பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்தில், ஜான் ட்ரேஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலருக்கான காசோலையையும் கொடுத்துள்ளார் எலான் மஸ்க். தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், “சவாலான மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைக்கவும் பதிவு செய்ய வைக்கவும் இந்த பிஏசி குழு உதவும்” என்றார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version