கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி மூட்டையில் வியாபாரி சண்முகம் என்பவர் பணத்தை அரிசி மூட்டையில் பதுக்கி உள்ளார்.

இதை பற்றி தெரியாமல் அரிசி மூட்டையை மைத்துனர் விற்றுள்ளார். இதைகேட்டு தலையில் அடித்துக்கொண்ட சண்முகம், அந்த அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறினார். இதனிடையே அரிசி மூட்டையில் ரூ.10 லட்சம் இருந்ததாக பெண் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணத்தை பலர் விதவிதமாக பதுக்கி வைப்பார்கள். வருமானவரித்துறை பயந்து சிலர் பதுக்கிவைப்பார்கள்.

சிலர் திருடர்களுக்கு பயந்து பீரோவிற்கு பதில் வேறு இடங்களில் பணம் மற்றும் நகைகளை பதுக்கிவைப்பார்கள்.

சிலர் சேலைக்கு அடியிலும், சிலர் சமையலறையில் உள்ள டப்பாக்களிலும், சிலர் கழிவறையிலும், சிலர் ரகசிய அறை வைத்தும் பணத்தை பதுக்குவார்கள்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி கடை நடத்தும் ஒருவர் பணத்தை அரிசி மூட்டைக்குள் பதுக்கி உள்ளார். அப்படி பதுக்கிய பணத்தை அவர் பறிகொடுத்துள்ளார். அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியில் வசிக்கும் 40 வயதாகும் சண்முகம்(வயது 40) அரிசி வியாபாரியாவார்.

இவரது மைத்துனர் சீனிவாசன், அரிசி கடையில் இருந்துள்ளார். அப்போது மந்தாரக்குப்பம் அருகே மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பூபாலன்(62) என்பவர் அரிசி வாங்க வந்திருக்கிறார்.

அவர் கேட்டதன் பேரில் ஒரு மூட்டை அரிசி சிப்பத்தை சீனிவாசன் விற்பனை செய்தார். இதற்கிடையில் சில மணி நேரத்திற்கு பிறகு சண்முகம் கடைக்கு வந்தார்.

அங்கு பணத்துடன் இருந்த குறிப்பிட்ட அரிசி மூட்டை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அவர், அந்த அரிசி மூட்டை எங்கே? என்று சீனிவாசனிடம் கேட்டார். அதற்கு அவர், வழக்கமாக நமது கடையில் அரிசி வாங்கும் பூபாலனிடம் மூட்டையை விற்பனை செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட அலறிய சண்முகம், அந்த அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக 2 பேரும் பூபாலன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அரிசி மூட்டை பிரிக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் இருந்த பூபாலனின் மகள் தாட்சாயினியிடம், இந்த மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகவும், அதை கொடுக்குமாறும் சண்முகம் கூறினார்.

அதற்கு தாட்சாயினி, அரிசி மூட்டையில் வெறும் ரூ.10 லட்சம் மட்டும் தான் இருந்ததாக கூறி அந்த பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகம், மீதமுள்ள ரூ.5 லட்சத்தை எங்கே என்று கேட்டு தாட்சாயினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

பதிலுக்கு அவரும் வாக்குவாதம் செய்ததார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து புகாரின் பேரில் வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

Share.
Leave A Reply

Exit mobile version