டெல் அலிவ்: ஈரான் மீது இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் போர் விமானங்கள் எல்லை தாண்டி ஈரானுக்குள் நுழைந்து குண்டு மழை பொழிந்துள்ளது.

போர் விமானங்கள் மூலம் சூப்பர் சோனிக், ராம்பேஜ் லாங்க் ரேஞ்ச் உள்ளிட்ட ஏவுகணைகளை ஈரான் மீது இஸ்ரேல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் மொத்தம் 100 போர் விமானங்கள் மொத்தம் 20 ராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தியதாக கூறப்படும் நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் 185க்கும் அதிகமான ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ்வை குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இஸ்ரேலுக்கு சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்தது.  ஆனால் பதிலடி கொடுக்காமல் இஸ்ரேல் காலம் தாழ்த்தி வந்தது.

இதற்கிடையே தான் இன்று அதிகாலையில் ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நுழைந்த இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டுகள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் மொத்தம் 3 ரவுண்டுகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை இஸ்ரேல் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் போர் விமானங்கள் ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரானுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் தான் ஈரான் வான்வெளி பரப்புக்குள் நுழைந்து இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன் விபரம் வருமாறு: அதாவது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தது. ஈரான் மீதான தாக்குதலுக்கு கடந்த 25 நாட்களாக இஸ்ரேல் திட்டம் தீட்டியது.

இதையடுத்து 26வது நாளான இன்று அதிகாலையில் ஈரான் எதிர்பாராத நேரத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேல் நாட்டில் இருந்து மொத்தம் 100 போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்தன. இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான 5வது ஜெனரேஷன் எப்-35 அதிர் பைட்டர் ஜெட்கள்((F-35 Adir fighter jets)), எப் 15I ரா’ம் கிரவுண்ட் அட்டாக் ஜெட்கள் (F-15I Ra’amground attack jets), எப் -16I சுபா ரே் டிபென்ஸ் ஜெட்ஸ் (F-16I Sufa Air Defence Jets) உள்ளிட்டவை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் என்பது 3 படிநிலைகளாக நடத்தப்பட்டுள்ளது. முதலில் இஸ்ரேல் விமானங்கள் ஈரான் வான் எல்லைக்குள் நுழைவதை அந்த நாடு அறியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஈரானின் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன்பிறகு 2வது மற்றும் 3வது படிநிலைகளில் தான் ஈரானின் நாட்டின் ஏவுகணை மற்றும் ட்ரோன் வசதி கொண்ட ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

மொத்தம் 100 போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்துள்ளது. இதில் 25 முதல் 30 விமானங்கள் தாக்குதலை தொடங்கியது.

10 ஜெட் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை ஒருங்கிணைக்கும் பணியை செய்தது. மற்ற விமானங்கள் உதவி செய்யும் பணியில் ஈடுபட்டன.

இந்த போர் விமானங்கள் இஸ்ரேலில் இருந்து 2,000 கிலோமீட்டர் தொலைவை கடந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த போர் விமானங்களில் இருந்து குண்டுகள், ஏவுகணைகள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதாவது ராம்பேஜ் லாங்க் ரேஞ்ச் (Rampage Long Range), சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் ‛ராக்ஸ்’ நெக்ஸ்ட் ஜெனரேஷன் உள்ளிட்ட ஏவுகணைகளை வீசி போர் விமானங்கள் ‛அட்டாக் செய்துள்ளன.

இந்த தாக்குதல் என்பது முழுக்க முழுக்க ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அந்த நாட்டின் ராணுவ செயல்பாட்டை முடக்கும் வகையிலும் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ஈரானில் உள்ள அணு கிடங்குகள், அணுசக்தி நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தாமல் அங்குள்ள 20 ராணுவ நிலைகளை டார்க்கெட் செய்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் ராணுவ நிலைகள் என்பது 20 ஏவுகணை மற்றும் ட்ரோன் வசதி கொண்ட தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு அனைத்து போர் விமானங்களும் வெற்றிக்கரமாக தாக்குதலை முடித்து இஸ்ரேலுக்கு பத்திரமாக திரும்பி சென்றுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version