13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இராணுவ சிப்பாய் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் பெற்றோர் இரண்டாம் திருமணம் செய்துள்ளதால் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தேக நபரான உறவினர் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சிறுமி இது தொடர்பில் தனது பாடசாலையில் உள்ள வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், இது தொடர்பில் குடாஓயா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version