“பாஜகவை சேர்ந்த உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று [சனிக்கிழமை] பின்னேரத்தில் அடையாளம் காணப்படாத தொலைப்பேசி எண்கள் மூலம் மும்பை காவல் கட்டுப்பாடு அறைக்கு இந்த மிரட்டலானது வந்துள்ளது.

அதில், சமீபத்தில் மும்பையில் வைத்து அஜித் பவார் சிவ சேனா தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது போல் 10 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் யோகி அதித்யநாத்தும் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டறியும் பணியில் மும்பை போலீஸ் இறங்கிய நிலையில் மெசேஜ் அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் – இன் கும்பல் பாபா சித்திக்கை அவரது எம்எல்ஏ மகனின் அலுவலகத்தின் முன் வைத்து கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. “,

Share.
Leave A Reply

Exit mobile version