நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பெருமளவில் ஆர்வம் காடடவில்லையென்பது வாக்களிப்பு வீத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

இம்முறை தேர்தலில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதிபெற்றிருந்த நிலையில் 11,815,246 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர் .53,25,108 பேர் வாக்களிக்கவில்லை .அதேநேரம் வாக்களித்த 11,815,246 பேரின் வாக்குகளில் 6,67,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதனால் 11,148,006 வாக்குகள் மட்டுமே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 1,62,63885 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்த நிலையில் 1,23,43302 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர் .39,20583 பேர் வாக்களிக்கவில்லை வாக்களித்த 1,23,43302 பேரின் வாக்குகளில் 744373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு 1,1598929 வாக்குகள் மட்டுமே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை விடவும் இம்முறை 14,04,525 பேர் அதிகமாக வாக்களிக்கவில்லை.

 

Share.
Leave A Reply

Exit mobile version