“மொசார்ட்” என வர்ணிக்கப்படும் ஏழு வயது சிறுவனுக்கு ரஷ்ய மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கைச் சேர்ந்த செர்ஜி என்ற சிறுவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணினி மொழி மென்பொருளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த வீடியோக்களை தனது யூடியூபில் கணக்கில் பகிர்ந்து வருகிறார்.
இந்த சிறுவனின் வீடியோக்கள் “ப்ரோ32” என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த நிறுவனம் அவருக்கு வேலை செய்யும் வயதை அடைந்தவுடன் நிறுவனத்தின் பெருநிறுவன பயிற்சியின் தலைவராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ப்ரோ32 நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி இகோர் மாண்டிக் பிபிசியிடம் தெரிவித்துள்ளதாவது,
வேலை வாய்ப்பு வழங்கப்பட்டமை குறித்து சிறுவனின் பெற்றோர் சந்தோசமடைந்துள்ளனர்.
அவரது தந்தை கிரில் ஆச்சரியமடைந்ததோடு, மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும், மகன் செர்ஜி நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறுவன் செர்ஜியின் யூடியூப் சேனலை 3,000 க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றார்கள்.
அதில் அவர் நிரலாக்க மொழிகளான பைதான் மற்றும் யூனிட்டி மற்றும் நியூரல் நெட்வொர்க்குகள் பற்றி கற்பிக்கும் வீடியோக்களை வெளியிடுகிறார்.
செர்ஜியிடம் ஏனையவர்கள் பயனடையக்கூடிய வியக்கதக்க கற்பித்தல் திறன்கள் உள்ளது.
“என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு மொஸார்ட்” .
“அவர் 14 வயதை எட்டும்போது, அவர் கற்பிப்பதில் குருவாகவும், வளர்ச்சியின் குருவாகவும் இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதனால்தான் அந்த நேரத்தை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.”
ரஷ்ய நாட்டின் சட்டத்தின்படி, ஒரு சிறுவன் 14 வயதை அடைந்ததும் பெற்றோரின் அனுமதியுடன், வரம்பிற்குட்பட்ட வேலை நேரம் மற்றும் சுருக்கப்பட்ட வேலை வாரத்தில் வேலை செய்யலாம்.
செர்ஜியின் பதவிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை பார்ப்பதற்கு நாங்கள் ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்,” அப்படியானால் அவருடைய சம்பளத்தைப் பற்றி நிச்சயமாக உரையாடலை ஆரம்பிப்போம்.” என தெரிவித்துள்ளார்.