நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, வியாழக்கிழமை (21) காலை 10 மணிக்கு கூடியது.

அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்துள்ளனர்.

அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ஜுனா இராமநாதன் சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து விட்டார்.

அது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம், எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்டுள்ளார்.

இது தொடர்பிலான ​வீடியோ வைரலாகியுள்ளது.

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது, சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற, சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என அர்ஜுனா இராமநாதன் பதிலளித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version