லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் 250க்கும் மேற்பட்ட ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பரில் இஸ்ரேல் ஹெல்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்த பின்னர் ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட கடும் ரொக்கட் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஹெஸ்புல்லா அமைப்பின் ரொக்கட்கள் இஸ்ரேலிய தலைநகரையும்,வடக்கு மத்திய இஸ்ரேலையும் தாக்கியுள்ளன இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த நிலையிலேயே ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய தலைநகரில் ரொக்கட்களின் சிதறல்கள் விழுந்து வெடித்துள்ளன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பொலிஸார் குடியிருப்பு பகுதியை ரொக்கட்கள் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து எரிந்து அழிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version