அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 மாணவர்களில் 4 மாணவனின் சடலம் புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமற்போன ஏனைய இரு மாணவர்கள், மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி உதவியாளரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
றிந்தவூர் பிரதேசத்தில் இருந்து மதுரசா ஒன்றில் இருந்து சம்பவதினமான செவ்வாய்கழமை (26) மாலை சம்மாந்துறை பிரதேசத்தை நோக்கி 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்ட விபத்திற்குள்ளானதையடுத்து வெள்ள நீரில் மூழ்கியதில் 5 பேர் காப்பற்றப்பட நிலையில் 6 மாணவர்கள் மற்றும் சாரதி, உதவியாளர் உட்பட 8 பேர் நீரில் இடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காணாமல் போனவர்களை கடற்படையினரின் உதவியுடன் இன்று புதன்கிழமை தேடும் நடவடிக்கையின் போது 4 மாணவர்களை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டனர்
இருந்தபோதும் காணாமல் போன் இரு மாணவர்கள் உழவு இயந்திரசாரதி உதவியாளர்களை சீரற்ற கால நிலைக்கும் மத்தியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.