யாழ்ப்பாணம் (Jaffna) – இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து நேற்று (29) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விசாரணைகள் முடிவுற்றதும் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) விடுதலைப் புலிகளின் தலைவர் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (29) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கயந்தரூபன் (37) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது முகநூல் பதிவு தொடர்பான விசாரணைக்காகவே இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version