திருமணத்தின்போது மணமேடையிலிருந்து அடிக்கடி பாத்ரூம் சென்று நண்பர்களுடன் மது அருந்திய மணமகன் பெண் வீட்டாரிடம் சிக்கிக்கொண்டார்.

டெல்லியில் உள்ள சாஹிபாத் என்ற இடத்தில் திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இத்திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் மணமேடைக்கு வந்திருந்தனர். முதல் கட்டமாக மணமக்கள் மாலையை மாற்றிக்கொண்டனர். மதச் சடங்குகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தன. மணமகன் மணமேடையில் இருந்தபோது திடீரென பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறினார்.

அங்குச் சென்று வந்த பிறகு மணமகன் லேசாகத் தள்ளாட ஆரம்பித்தார். இதனால் அவரது செயல்பாட்டில் மணமகள் வீட்டாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அத்தோடு தொடர்ந்து அடிக்கடி மணமகன் பாத்ரூம் சென்று வந்தார். ஒரு முறை பாத்ரூம் சென்றபோது திரும்பவேயில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் பாத்ரூம் சென்று பார்த்தபோது உள்ளே மணமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரோடு சண்டையிட்டனர்.

ஆனால் மணமகன் தனக்கு அடிக்கடி பாத்ரூம் செல்ல வேண்டியிருக்கிறது என்று ஏதேதோ காரணம் சொல்லிப் பார்த்தார். ஆனால் அந்த காரணத்தைப் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பிரச்னை போலீஸ் நிலையத்திற்குச் சென்றது. போலீஸார் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தனர்.

ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. மாப்பிள்ளை வீட்டார் ரூ.10 லட்சம் கேட்டதாகக் குற்றம் சாட்டினர். இறுதியில் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. மணமகன் மது ஆசையால் திருமணம் நின்றுபோனது.

 

Share.
Leave A Reply

Exit mobile version