கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது காதல் பற்றி இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தீபாவளி கொண்டாட்டத்தில் ஆண்டனி தட்டில் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பர், காதலரான ஆண்டனி தட்டிலை டிசம்பர் 12-ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையயில் இருவரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக, கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது காதல் பற்றி இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆண்டனி தட்டில் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது.