“நடிகர் ஜெயராம் -நடிகை பார்வதி ஆகியோரது மகனான காளிதாஸ் ஜெயராம் மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் பலரால் பாராட்டப்பட்டதுசுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் தொடரில் காளிதாஸ் நடித்த திருநங்கை கதாபாத்திரம் அதிக வரவேற்பு பெற்றது.இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணி காளிங்கராயனை காதலித்து வந்தார்.

மந்திரங்கள் முழங்க இருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது. திருமண விழாவில் மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி, கேரளா சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணம் நடைப்பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே மாதம் இதே குருவாயூர் கோவிலில் ஜெயராம் மகள் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
#Jayaram son @kalidas700 got married to #Tarini at Guruvayoor temple today morning 🤩 Wishing this lovely couple 😍😍😍😍 all the best #KalidasJayaram #TariniKalingarayar pic.twitter.com/CskqPZwJeA
— sridevi sreedhar (@sridevisreedhar) December 8, 2024