இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள் இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின் அலறல் கேட்டதாகதெரிவித்துள்ளனர்.

சியாரோ லியோனை சேர்ந்த 11 வயது சிறுமி உயிர்காப்பு அங்கிகளுடன் மூன்றுநாள் கடலில் மிதந்திருக்கின்றாள் என கொம்பஸ் கலெக்டிவ் தெரிவித்துள்ளது.

அந்த சிறுமி காப்பாற்றப்படுவதை காண்பிக்கும் படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த சிறுமி 12 மணித்தியாலங்கள் கடலில் தத்தளித்துள்ளார் என அவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர் தெரிவித்துள்ளார்.

உலோக படகு துனிசியாவிலிருந்து புறப்பட்டது என தெரிவித்துள்ள அந்த சிறுமி கடும் புயல் 11 அடிஅலைகள் காரணமாக படகு புறப்பட்ட சில நிமிடத்திலேயே கவிழ்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன்வேறு இருவரும் கடலில் தத்தளித்தனர் ஆனால் அவர்களை பின்னர் காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version