யாழில் பரவி வரும் மர்ம நோய் “எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்)” என சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகள் மூலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு பரவிய எலிக்காய்ச்சல் தொடர்பில் நேற்று (11) ஊடகவியலாளர்கிடம் பேசிய வைத்தியர் சத்தியமூர்த்தி,

காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் உயிரிழந்தவர்கள் 20 – 65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எலிக்காய்ச்சல் நோய் என கூறப்படுவதால், நோயறிதலை மேலும் உறுதிப்படுத்துவதற்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version