82 வயதுடைய தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இரத்தினபுரி, கொடகவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிசோகொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொடகவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் உயிரை மாய்த்துக் கொண்ட மகனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், கோபமடைந்த மகன் தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், தப்பிச் சென்ற மகன், உடவளவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி, பல்லேபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version