முகநூல் ஊடாக அறிந்துக்கொண்ட 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் புத்தல பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் படல்கும்புரை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முகநூல் ஊடாக அறிந்துக்கொண்டு அவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 16ம் திகதி தனது நண்பியின் வீட்டிற்கு சென்ற நிலையில் காதலனையும் சந்தித்துள்ளார். அதன் பின்னர்,குறித்த இளைஞன், சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் போது, ​​புத்தல வீதியில் உள்ள தேக்குமரக்காட்டுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த சிறுமி தாய், தந்தையிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version