ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியின் மக்டிபேர்க்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய 50 வயதுடைய வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்து வைத்தியர் சவுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு குடிபெயர்நதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தைக்குள் காரை செலுத்தி விபத்து இடம்பெறும் போது சந்தைக்குள் சனக்கூட்டம் காணப்பட்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் அந்தக் கார் ஜேர்மனியின் முனிச் நகரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவொரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாமெனவும் காருக்குள் வெடிபொருட்கள் உள்ளதாகவும் ஜேர்மனிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version